ஒரே கட்டமாக நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், இந்த தேதியில் தான்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை என சென்னை ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டு இருந்தது. மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று செய்தியாளர்கள் சந்தித்து தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

அறிக்கையின்படி,

1.அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

2.வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி, வேட்புமனுவை வாபஸ் பெற பிப்ரவரி 4ஆம் தேதி கடைசி நாளாகும்.

3.வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அடுத்த நாள் நடைபெறும் என TNSEC ஆணையர் தெரிவித்தார்.

4.மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ளது.

5.தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TNSEC) 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 டவுன் பஞ்சாயத்துகளுக்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் மாதிரி நடத்தை விதிகளை அறிவித்துள்ளது.

6.TNSEC செப்டம்பர் 2016 இல் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணைக்கான அறிவிப்பை அறிவித்தது, ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது.

7.சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், திருச்சி, சேலம் மற்றும் தமிழகத்தில் உள்ள பிற நகரங்களுக்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Leave a Comment