இந்த தேதியில் அஜித்தின் ‘வலிமை’ வெளியாக வாய்ப்பு!

0
136

இந்த தேதியில் அஜித்தின் ‘வலிமை’ வெளியாக வாய்ப்பு!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது.  இந்த மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதையடுத்து கடந்த மாத இறுதியில் வலிமை படத்தின் டிரைலர் வெளியானது. வலிமை படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக இருந்தது.

அஜித் – எச். வினோத் – போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ‘வலிமை’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து காணப்பட்டது.

‘வலிமை’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாக தயாராக இருந்த நிலையில் கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலையின் காரணமாக வலிமை படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் திரையரங்குகளில் வலிமை படத்தை காண ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு படக்குழுவின் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் இந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு என்று வெளியிடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.