வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!!

0
211

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் வலிமை படத்தின் டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, கடந்த மாத இறுதியில் வலிமை படத்தின் டிரைலர் வெளியானது. வலிமை படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலையொட்டி ‘வலிமை’ திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாவதாக இருந்தது.

‘வலிமை’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாக தயாராக இருந்த நிலையில் கொரோனா பரவலின் தாக்கத்தால் ஊரடங்கு போடப்பட்டது. மேலும், திரையரங்கங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வலிமை படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியாகி உள்ளது. அதன்படி வலிமை திரைப்படம் இந்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறி வந்தனர். இதற்காக படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருந்த நிலையில்,  தற்போது அந்த (பிப்ரவரி 24) தேதியிலேயே வலிமை படம் வெளியிடப்படும் என வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிபடுத்தி உள்ளார்.

புதுச்சேரியில் உள்ள திரையரங்கங்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள திரையரங்கங்களில் வரும் 10ஆம் தேதிக்கு மேல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே, பிப்ரவரி 24ஆம் தேதி ‘வலிமை’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleநடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!
Next articleஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!!