‘பத்து தல’ படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் சிம்பு!

Photo of author

By Parthipan K

‘பத்து தல’ படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் சிம்பு!

இன்று (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவின் பிறந்தநாள். நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் பத்து தல திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. இந்த படம் அறிவித்த தேதியில் வெளியாகுமா? ஆகாதா? என்கிற குழப்பத்துக்கு மத்தியில் சிம்புவின் ‘மாநாடு’ படம் பல தடைகளை தாண்டி, அறிவித்த தேதியில் கடந்த நவம்பர் மாதம் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பல தடைகளுக்கு இடையில் வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. மாநாடு படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த மாநாடு திரைப்படம் சிம்புவின் திரை வாழ்வில் திருப்புமுனை படமாகவும் அமைந்தது.

மாநாடு படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘பத்து தல’ மற்றும்  ‘கொரோனா குமார்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் சிம்பு.

இந்த நிலையில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’  திரைப்படத்தின் படக்குழுவினர், சிம்புவின் பத்து தல திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும்  கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு ஏஜிஆர் (AGR) என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.