பள்ளிகளுக்கு 2 மாதம் விடுமுறை! கொண்டாட்டத்தில் மாணவர்கள்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை சித்திரவதை செய்து வருகிறது.இதனால் அனைத்து துறைகளும் பெரும் அளவிற்கு நட்டத்தை சந்தித்துவிட்டனர்.மீண்டும் வேலைகளை செய்ய துவங்கும்போது அடுத்தடுத்த தொற்றுகள் வந்து மீண்டும் முடங்கும் நிலை ஆகிவிடுகிறது.இதனால் மக்களால் தங்களது அன்றாட வாழ்க்கையை கூட வாழ முடியவில்லை.இன்றுவரை சில தொழில்கள் பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.இது ஓர் பக்கம் இருக்கையில் மற்றொரு பக்கம் மாணவர்களின் கல்வி அதிகளவு பாதிப்படைந்துள்ளது.
முதல் அலையின் போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கா காரணத்தினாலும் சரியான முன்னேற்பாடுகள் இன்றி இருந்த காரணத்தினாலும் தொற்று அதிகளவில் பரவாமல் இருக்க மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டது.மேலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.அதுமட்டுமின்றி சில மாநிலங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அனைத்து மாணவர்களும் ஆள் பாஸ் என கூறினர்.இதனால் மாணவர்களுக்கு பொத்தேர்வு என்றால் என்ன என்பது தெரியாமலே போனது.அதற்கு அடுத்தபடியாக ஓர் ஆண்டுகளில் பெரியாவர்கள் முதல் சிறார்கள் வரை அனைவருக்கும் தற்பொழுது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதனால் மாணவர்களுக்கு கட்டாயம் இம்முறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என அனைத்து மாநிலங்களும் தெரிவித்துள்ளது.மேலும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர்.இம்முறை பொத்தேர்வு நடப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என கூறியுள்ளனர்.அவ்வாறு கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகளவில் காணப்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்திருந்தனர்.நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பயின்று வந்தனர்.நாளடைவில் தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.
மாணவ மற்றும் மாணவிகளும் பள்ளி,கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பாடங்களை பயின்று வருகின்றனர்.மேலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை பொதுத்தேர்வு மார்ச் 21 ஆம் தேதி நடத்த உள்ளதாக பல தகவல்கள் வெளிவந்தது.அதேபோல 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரு உள்ள மாணவர்களுக்கு 24 தேதி நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.இந்த தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதிக்குள் நிறைவடைய உள்ளது.அதனால் மாணவர்களுக்கு 2 மாதம் கோடை விடுமுறை அளிப்பதாக கூறியுள்ளனர்.ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என கூறுகின்றனர்.இந்த செய்தியை கேட்ட மாணவர்கள் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர்.