தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

0
70

தோனியின் ‘அதர்வா: தி ஆரிஜின்’ புத்தகத்தின் முதல் பிரதி வெளியானது!

மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தயாரித்துள்ள மெகா பட்ஜெட் கிராபிக் நாவல் ‘அதர்வா – தி ஆரிஜின்’. இந்த நாவலை ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதியுள்ளார். ‘அதர்வா – தி ஆரிஜின்’ உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன கால கிராஃபிக் நாவல் ஆகும். இந்த நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு கிரிக்கெட் வீரர் தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த கிராபிக் நாவலின் மோஷன் போஸ்டரை தோனி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சியாகும். இந்த பிரம்மாண்டமான புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என இது குறித்து தோனி தெரிவித்திருந்தார்.

மேலும், எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே, சம்மதித்தேன் என்று இந்த கிராபிக் நாவலில் தான் இணைந்தது குறித்து தோனி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருந்தார்.

வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டது. இந்த நிலையில் டோனியின் ‘அதர்வா: தி ஆர்ஜின்’ கிராபிக் நாவல் புத்தகத்தின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

‘அதர்வா: தி ஆரிஜின்’ என்ற இந்த புதிய முயற்சியில் நானும் இணைந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது திறமையான மற்றும் ஆர்வமுள்ள குழுவால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு சுவாரசியமான படைப்பாகும். ரஜினி சார் இந்த குழுவின் பணியை அங்கீகரித்து பாராட்டியுள்ளார். அவர் இந்த நாவலின் முதல் பிரதியை வெளியிட்டதில் மிகவும் மகிழச்சியடைகிறேன் என தோனி தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K