பிறந்து ஒரு வருடமான குழந்தைக்கு பாலியல் தொல்லை! தண்டனையாக ரூ 25 ஆயிரம் அபராதம்!
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்த வண்ணமாக தான் உள்ளது. முன்பெல்லாம் மாதம் ஒன்று அல்லது இரண்டு வழக்குகள் பெண்களுக்கு எதிராக இருக்கும். தற்போது தினந்தோறும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து வழக்குகள் ஆரம்பித்துவிட்டது. சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் என அனைவருக்கும் பாலியல் தொல்லை கொடுப்பது தற்போது வழக்கமாக மாறிவிட்டது. கற்றுக்கொடுக்கும் ஆசான்களே தங்களின் நிலையை மீறி மாணவர்களிடம் நடப்பதும் ஒருபக்கம் வழக்கமாக தான் இருக்கிறது.
அந்தவகையில் 2018ஆம் ஆண்டு புளியந்தோப்பில் நடந்த சம்பவம் அனைத்து மக்களையும் அதிக அளவு கோபம் அடைய செய்தது. கூ புலியந்தோப்பு பகுதியில் வசிக்கும் தம்பதியருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து ஒரு வருட காலமே ஆனது. இவர்கள் வசிக்கும் குடியிருப்பில் வாட்ச்மேனாக வேலை செய்பவர்தான் சிவா. இவர் அவ்வபோது குழந்தையை பார்க்க வருவதுபோல் அவர்களது வீட்டிற்கு வருவது வழக்கம். அப்படி வரும் வேலையில் பிஞ்சு குழந்தை என்று பாராமல் அந்த குழந்தையிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையறிந்த தம்பதியினர் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாட்ச்மென் சிவா மீது புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் சிவா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கானது 2 வருட காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையானது நேற்று முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. சிவா மீது கொடுக்கப்பட்ட புகார் தற்பொழுது நிரூபணமாகியுள்ளது. அதனால் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளனர்.
வெறும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து வெளிவந்த இந்த தீர்ப்பை கண்டு பல நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். இவ்வாறான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்பொழுதுதான் இவரைப் பார்த்து மற்றவர்கள் அவ்வாறான செயலை செய்ய அச்சப்படுவர் என கூறி வருகின்றனர்.