தனியார் பள்ளிகளை எச்சரித்த அமைச்சர் அன்பில் மகேஷ் ! இந்த காரணத்திற்காகவா?
கொரோனா தொற்று ஆரம்பித்த கட்டத்திலிருந்து மக்கள் தங்களது வாழ்வாதாரத்தையே துடைக்கும் நிலை வந்து விட்டது. இந்த தொற்று முதலில் எந்த வகைகளில் பரவுகிறது எதனால் பரவுகிறது என்று தெரியாமலே இருந்தது. பிறகு அதை கட்டுப்படுத்த வழிமுறைகள் கண்டுபிடிக்கட்டது. அவர் கட்டுப்பாடு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டும் தற்பொழுது வரை அதன் தொற்று பரவிக் கொண்டே தான் உள்ளது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்த பிறகும் தற்போது வரை உயிரிழப்புகள் நடந்து கொண்டே தான் உள்ளது. மேலும் இந்தத் தொற்று மக்களை பாதுகாக்காமல் இருக்க முதல் கட்டத்திலேயே ஊரடங்கு அமல்படுத்தினர்.
முதல் கட்டத்தில் இருந்து மூன்று ஆண்டு காலமாக பாதி நாட்கள் மக்கள் ஊரடங்கிலேயே கழித்தனர். அந்த வரிசையில் பள்ளி மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டது. அவர்களும் தங்கள் பாதி நாட்களை ஆன்லைன் வழி கல்வியிலேயே கழித்தனர்.தற்பொழுது தான் மூன்றாவது அலை கட்டுகுள் வந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் பொது தேர்வு நடக்காத இருந்ததால் இந்த ஆண்டு பொது தேர்வு நடக்காது என்று கூறி வந்தனர். அவர்கள் எண்ணத்தை முறியடிக்கும் வகையில் 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வின் கால அட்டவணை வெளியிடப்பட்டது.இந்த தேர்வானது மே மாதம் தொடங்க உள்ளது.
தற்பொழுது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஏனென்றால் தொற்று பாதிப்பால் நடைப்பு கல்வி ஆண்டின் பாடத்திட்டங்களே இன்றளவும் முடியாமல் உள்ளது.இவ்வாறு இருக்கையில் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு பாடத்திட்டத்தை முடிக்காமல் அடுத்தாண்டு பாடத்திட்டத்தை நடத்துவதாக புகார்கள் வந்துள்ளது.இதனால் மாணவர்களுக்கு படிப்பு சுமையாக ஆகிவிடும்.எனவே இவ்வாறு அடுத்தாண்டு பாடத்திட்டத்தை நடத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.