இந்தியாவிற்கு வந்த ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்! காரணம் இதுதான்!

0
110

கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் 2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்தடைந்தார். அவரது அதிகாரபூர்வ பயணத்தை வரவேற்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தன்னுடைய வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களையும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்தித்து பேசவிருகிறார்.

இந்த சந்திப்பின்போது உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா முன்னெடுத்திருக்கின்ற நடவடிக்கை மற்றும் அந்த நாட்டுடனான அமையும் பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான போர் விவகாரத்தில் இந்தியா இதுவரையில் நடுநிலையான நிலைப்பாட்டை கடைபிடித்து வருகிறது.

இந்தப் போரைக் கைவிட்டு 2 தரப்பினரும் பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்திய பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

Previous articleதமிழகத்தில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த அரசு கிளார்க் வேலை? உடனடியாக முந்துங்கள் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Next articleநள்ளிரவு முதல் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!