திருமணமான 15 நாளில் புது மாப்பிள்ளைக்கு ஏற்பட்ட சோகம்! எமனாக மாறிய போஸ்ட் வெடிங் போட்டோஷூட்!
திருமணம் என்றாலே சொந்தபந்தங்கள் சூழ அனைவரின் ஆசீர்வாதங்கள் லோடு நடைபெறும் ஓர் பந்தம். முந்தைய காலம் போல் தற்பொழுது இல்லை. கரோனா என்ற பெருந் தொற்று வந்து சொந்தபந்தங்கள் கூடும் நிலையையே தவிர்த்து விட்டது. அதைப்போல இக்காலகட்டத்தில் உள்ள தம்பதிகளுக்கு போட்டோஷூட் இன் மேல் அதிகளவு மோகம் ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன் போட்டோ ஷூட் திருமணத்திற்கு பின் போட்டோ ஷூட் என்று பல வகைகளில் எடுத்து வருகின்றனர்.
இவர்கள் சினிமாட்டிக் முறையில் போட்டோக்கள் இருக்கவேண்டும் என்று எண்ணி அருவிகள், பசுமை வாய்ந்த இடங்கள் என போட்டோ எடுத்து வருகின்றனர். அவ்வாறு எடுக்கும்பொழுது இயற்கை சீற்றம் பலரின் உயிரை பறித்து விடுகிறது. கேரளாவை சேர்ந்த பெரம்பரா பகுதியை சேர்ந்தவர் ரெஜிலால். இவருக்கு கடந்த மாதம் 14ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்று முடிந்தது. தன் மனைவியுடன் பிரீ வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க வேண்டுமென்று மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்.
அதனால் இவர் வசிக்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் ஜானகி காடு என்ற பகுதியில் இருக்கும் குட்டியடி ஆற்றோரத்தில் பிரீ வெட்டிங் போட்டோ ஷூட் எடுக்க நினைத்திருந்தார். அந்த குட்டியடி ஆற்றில் அதிக அளவு குறிகள் உள்ளது . அது தெரியாமல் ரெஜிலா தன் மனைவியுடன் போட்டோஸ் எடுக்க சென்றார். அவர் சென்று போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது பாறையில் நின்று கொண்டிருந்த வேளையில் திடீரென்று வழுக்கி கணவன் மனைவி இருவரும் ஆற்றில் விழுந்தனர்.
அதில் ரெஜிலால் ஆற்றின் அடியில் இருக்கும் குழியில் சிக்கி கொண்டார். நீச்சல் தெரியாத காரணத்தினால் அவரால் மீள முடியவில்லை. அவரது மனைவி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வாறு ரெஜிலாலை மீட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை. திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் ரெஜிலால் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.