சீனாவிலிருந்து பரவ ரெடியாக இருக்கும் அடுத்த வைரஸ்! இது குழந்தைகளை மட்டுமே தாக்குகிறதாம்!
சீன நாட்டில் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திற்கும் தீயாக பரவியது. தற்போது வரை தாக்கத்திலிருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார ரீதியாகவும் பல நாடுகள் பின்னடைவை சந்தித்தது. அனைத்து நாடுகளும் தற்போது தான் தொற்று பரவலில் இருந்து மக்களை காத்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சீனாவில் அடுத்த புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் இது குறிப்பாக ஒரு குழந்தைக்கு பரவியுள்ளது. சீனாவில் தற்போது 4 வயது சிறுவன் ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
இது புதிய வகையான H3N8 எனப்படும் ஒரு புதிய வகையை சார்ந்தது என அந்நாட்டின் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. அச்சிறுவன் சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிறுவனை அழைத்துக் கொண்டு அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். அவ்வாறு சென்று அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பறவை காய்ச்சலில் இது ஒரு புதிய வகை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களில் சோதித்து பார்த்தனர்.
அவர்கள் யாருக்கும் இந்த பறவை காய்ச்சல் தொற்று காணப்படவில்லை. இது எந்த வகையில் பரவி இருக்கும் என கண்டறிய தொடங்கினார். அந்த வகையில் பார்க்கும் பொழுது இவர்களது வீட்டில் கோழி ஆடு என்று கால்நடைகளை வளர்த்து வந்துள்ளனர். அந்த கால்நடை வளர்ப்புகளிலிருந்து இந்த சிறுவனுக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடுமா என சுகாதார அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த தொற்று பாதிப்பு எளிதில் மற்றவர்களுக்கு பரவுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர்.