30 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! ஒரே போஸ்டில் வசமாக மாட்டிய ஆசிரியர்!
பெண்கள் எதிர்காலத்தை நினைத்து பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து வருகின்றனர். அவ்வாறு அனுப்பப்படும் மாணவர்களுக்கு குருவாக இருக்க வேண்டும் ஆசியர்களை கீழ்த்தரமான செயலை செய்கின்றனர். தற்சமயம் பல பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் இருந்து வருகிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் அன்றாடம் ஏதேனும் ஒரு பள்ளியில் மலர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியர் மீது புகார்கள் எழுந்த வண்ணம் ஆக தான் உள்ளது. அந்த வகையில் தற்போது கேரளாவில் கொடூரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலத்தில் மலப்புரம் என்ற பகுதியை சேர்ந்தவர் தான் கேவி சசிகுமார். இவர் அதே பகுதியில் கவுன்சிலர் ஆகும் பதவியில் உள்ளார். மேலும் இவர் ஆசிரியராக முப்பத்தி எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார்.
முப்பத்தி எட்டு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் கடந்த மார்ச் மாதம் தான் ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அப்பள்ளியில் இவருக்கு கோலகலமாக பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சி குறித்த சசிகுமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனை பார்த்த இவரது நண்பர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவ்வாறு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் முன்னாள் மாணவர் குமார் என்பவர் இவருக்கு எதிராக ஓர் போஸ்ட் ஒன்றை அப்லோட் செய்தார். அதில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளி வந்தது. சசிகுமார் என்ற இந்த ஆசிரியர் முப்பத்தி எட்டு வருடமாக அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார் என கூறியிருந்தார்.
மேலும் சசிகுமாரால் பாதிக்கப்பட்ட மாணவிகளும்,முன்னால் மாணவர் குமார் இவ்வாறு பதி விட்டதை அடுத்து,ஒருவர் பின் ஒருவராக தங்களுக்கு நேர்ந்த அநீதியை கூறி உள்ளனர். கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஆசிரியர் சசிகுமார் மீது புகார் அளித்தனர். இவர்களின் புகாரின்பேரில் சசிகுமாரை போலீசார் கைது செய்ய சென்றனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்த சசிகுமார் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து போலீசார் சசிகுமாரை வலைவீசி தேடி வந்த நிலையில் அவரை கைது செய்தனர். மேலும் அவர் தந்து கவுன்சிலர் பதவியையும் ராஜினாமா செய்தார். இவர் மீது தற்போது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.