கேரளாவிற்கு ரேஷன் அரிசி கொள்ளை தீவீரம்! இவ்வாறு கடத்தினால் எங்களால் பிடிக்க முடியாது! போலீசாரின் அலட்சிய போக்கு!
தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் கம்பம் கூடலூர் லோயர் கேம்ப் பகுதிகளில் ரேஷன் அரிசி அதிகமாக சேகரிக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகமாக கடத்தப்பட்டு வருகிறது.. இதை காவல்துறையோ உத்தமபாளையம் புட்செல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை மேலும் மாவட்டம் தோறும் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மாட்டுத்தீவனம் போல் தினந்தோறும் சரக்கு வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது.. இதைப் பற்றி புட்செல் அதிகாரிகளிடம் தகவல் கேட்ட பொழுது ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கொண்டு செல்லும் போது எங்களால் வழக்குப் பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் பதில் தெரிவிக்கின்றனர்.. இதுபற்றி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிந்து உரிமை சார்ந்த அதிகாரிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.. மேலும் கம்பம் பகுதியில் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பவும் வியாபாரிகள் அதிகமாகி கொண்டே இருக்கின்றனர்.. காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா??