பெண்கள் இதை செய்தால் குடும்பத்திற்கு கேடு! கட்டாயம் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!
பொதுவாக பெண்கள் குடும்பம், வீடு என வரும்போது கவனமாக செயல்படவேண்டும். பூஜை, வாஸ்து மாதிரியான சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் தேவை. இல்லையென்றால் சிறுதவறும் பெரும் கேடுக்கு வழி வகுக்கும்.
பெண்கள் கோலமிடும் போது தெற்கு திசை நோக்கி நின்று கோலமிடுதல் கூடாது.
மேலும் வாசல் தெளிக்கும் போது சாணத்துடன் மஞ்சள் சேர்ப்பது மிகவும் சிறப்பானது.
ஆனால் அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் கோலம் போடக்கூடாது.
திருமணமான பெண்கள் காலில் ஒரே ஒரு மெட்டியை தான் அணிதல் வேண்டும். ஒரு காலில் இரண்டு அல்லது மூன்று மெட்டியை அணிவதனால் அவரது கணவரின் ஆரோக்கியத்திற்கு பிரச்சனை ஏற்படும்.
கர்ப்ப நிலையில் உள்ள பெண்கள் ஆக்ரோஷமான தெய்வங்கள் உள்ள இடங்களுக்கு செல்லுதல் கூடாது. இவர்கள் விரதம் கடைபிடிக்க தேவையில்லை ஆனால் கோவில்களுக்கு மட்டும் செல்லலாம்.
திருமணமான பெண்கள் கிழக்கு திசையை நோக்கி இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் குங்குமத்தை இடுதல் வேண்டும்.
இவர்கள் கோவிலில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்தல் கூடாது. மேலும் கோவிலில் உள்ள தெய்வத்தை வணங்கும்போது முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் தலைக்கு குளிக்கும் போது மஞ்சள் தேய்த்து குளித்தல் வேண்டும்.
திருமணமான பெண்கள் செவ்வாய் வெள்ளி போன்ற நாட்களில் தலைக்கு குளித்தல் வாழ்வில் ஆன்ம அமைதியை கொடுக்கும்.