கரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா?
சென்னை அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தான் இந்த அசேன்பாட்ஷாவின் குடும்பத்தினர்.இவரது ஒரே மகள் பாத்திமா. இச்சிறுமிக்கு வயது 13. இவர்கள் வீட்டில் கரையான் பெருந்தொல்லையாக சில காலமாக இருந்து வந்தது. வீட்டின் வெளியே கரையான் தொல்லை என்றால் வீட்டில் உள்ள மர தூணின் ஒன்றிலும் கரையான் ஆக்கிரமித்தது.
இதனை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று அசேன்பாட்ஷா நினைத்துள்ளார்.பல மருந்துகள் அதற்கு தெளித்தும் அந்த கரையான் அங்கிருந்து போகவில்லை. இதற்கு இறுதி முடிவாக தீ வைத்து கரையானை அழித்துவிடலாம் என்று முடிவு செய்தார்.
இதனையடுத்து கடந்த வாரம் பெயிண்டில் கலக்கும் தின்னரை ஊற்றி கரையான் ஆக்கிரமித்த இடத்தை தீ வைத்துள்ளார். அப்போது திடீரென்று வீடு முழுவதும் அந்த தீ மளமளவென பரவ தொடங்கியது. இதனால் உள்ளிருந்த அசேன்பாட்ஷா மற்றும் அவரது ஒரே மகள் பாத்திமா மனைவி ஆகியோர் தீயில் சிக்கினார்.
வீட்டில் கரும்புகை மற்றும் எரிந்த வீட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தட்டு தடுமாறி அந்த மூன்று பேரையும் மீட்டனர். பிறகு முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் லேசான தீக்காயத்துடன் அசேன்பாட்ஷா அவரது மனைவி உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரையானை அழிக்க வைக்கப்பட்ட தீயில் 13 வயது சிறுமி ஒருவர் தீப்பிடித்து எறிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.