நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமி

0
165
#image_title

நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமி

நடிகர் வடிவேல் பாணியில் யோகா மேட்டுடன் போராடும் ஆனைமலையை சேர்ந்த 3 வயது சிறுமியின் நகைச்சுவை வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் வடிவேலு பாஞ்சாலங்குறிச்சி என்னும் திரைப்படத்தில் குடித்துவிட்டு தள்ளாட்டத்துடன் ஒரு ஓலை பாயில் படுக்க முயற்சி செய்வார். ஓலை பாய் இருபுறமும் சுருட்டிக் கொள்ளும் இந்த நகைச்சுவை மிகவும் ரசிகத்தக்கதாக இருக்கும்.

இதேபோல் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலையைச் சேர்ந்த 3 வயது வேத ஸ்ரீ என்கிற சிறுமி யோகா செய்வதற்காக தனது வீட்டில் யோகா செய்யக்கூடிய மேட்டை தரையில் விரிக்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போனது.

சிறுமி வேதஸ்ரீ செல்லமாக யோகா செய்யக்கூடிய மேட்டை காலால் உதைத்துப் பார்த்தும் நேர் செய்ய முடியாததால் இறுதியில் தனது தாயாரை உதவிக்கு அழைக்கும் சுட்டி சிறுமியின் இந்த வைரல் வீடியோ நடிகர் வடிவேலு ஓலை பாயைவிரிக்க முயற்சி செய்யும் காட்சியை அனைவருக்கும் நினைவு படுத்தி உள்ளது .

நடிகர் வடிவேலுவின் காமெடி காட்சியை நினைவுபடுத்தும் சிறுமி வேதஸ்ரீ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.