ரத்த வெள்ளத்தில் துடிக்கும் பச்சிளம் குழந்தை!! தந்தையின் கொடூர செயல்!!

ரத்த வெள்ளத்தில் துடிக்கும் பச்சிளம் குழந்தை!! தந்தையின் கொடூர செயல்!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டை அருகே உள்ள ஒரு கிராமம் தான் தேவிசெட்டிகுப்பம். இங்கு வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முப்பது வயதில் மணிகண்டன் என்ற மகன் ஒருவர் இருக்கிறார்.

இவர் இந்திய விமானப்படையின் தாம்பரம் பிரிவில் உணவு பரிமாறும் இடத்தில் வேலை செய்து வருகிறார். மணிகண்டனுக்கு ஹேமலதா என்னும் பெண்ணுடன் கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்து சில மாதத்திலேயே ஹேமலதா கருவுற்றிருந்தார். எனவே, பிரசவத்திற்காக ரெட்டியூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 26 நாட்களுக்கு முன்புதான் இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை காண தந்தையான மணிகண்டன் நேற்று இரவு ரெட்டியூருக்கு வந்துள்ளார்.

குழந்தையை பார்த்த மணிகண்டன் குழந்தை என்னைப்போல் இல்லை. இது எனக்குப் பிறக்கவில்லை என்று மனைவி  ஹேமலதாவிடம் சண்டையிட்டுள்ளார்.

இந்த சண்டை முற்றிய நிலையில், மணிகண்டன் தனது கையில் வைத்திருந்த குழந்தையின் கழுத்தையும், வலது கையையும் பிளேடால் அறுத்து விட்டார்.

கழுத்தை அறுத்துவிட்ட உடனேயே மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்தம் வழிந்த படி 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கதறியதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தையின் கழுத்தை அறுத்த மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெற்ற குழந்தையை தந்தையே கழுத்தை அறுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.