தற்போது சமீப காலங்களாக இந்த இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் என இணையதளங்களில் காதல் செய்து உடலுறவுக்காக பழகி பின் தனியாக கடத்திச் சென்று கொலை செய்வது வழக்கமாகி கொண்டே வரும் நிலையில் தற்போது அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பெங்களுருவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கோகோய் என்ற பெண் வசித்து வந்தார். அவர் தனியார் ஐ டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த ஆரவ் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பின் அவர்கள் தீவிரமாக காதலிக்க ஆரம்பித்தனர்.
அதனை தொடர்ந்து சமீப காலங்களாக இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் இருவரும் தனி குடியிருப்பு ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அந்த அறையில் ஏற்பட்ட மோதலில் ஆரவ் கோகோய் யை கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.
பிறகு போலீசார் அவரை பிடித்தனர். பிடித்து விசாரித்ததில் அவர் ஆன்லைன் மூலம் கத்தி மற்றும் கயிறு ஆகியவற்றை வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் காதலில் ஏற்பட்ட சிறிய மோதலுக்காக அநியாயமாக ஒரு உயிர் பறிபோனது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.