முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்!

Photo of author

By Savitha

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்!

Savitha

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மே – 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

மாலை 5மணியளவில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக முதலீடுகளை ஈர்க்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளிநாட்டு பயணம் குறித்தும், அடுத்த மாதம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்களுடன் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.