சமையலறையில் கட்டாயம் கேமரா.. வாடிக்கையாளர் முன்னிலையில் லைவ்?? ஹோட்டல் உரிமையாளர்களே அலர்ட்!!

0
130
A camera must be in the kitchen.. Live in front of the customer?? Hotel owners alert!!
A camera must be in the kitchen.. Live in front of the customer?? Hotel owners alert!!

சமையலறையில் கட்டாயம் கேமரா.. வாடிக்கையாளர் முன்னிலையில் லைவ்?? ஹோட்டல் உரிமையாளர்களே அலர்ட்!!

தமிழகத்தில் பல கடைகளில் மீதமான இறைச்சி மற்றும் உணவுகளை பதப்படுத்தியதை உணவு பாதுகாப்பு துறை கிலோ கணக்கில் சமீபத்தில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் ஹோட்டல்களில் உள்ள சமையலறைகளில் கேமரா பொருத்தும் படி பாஜக மாநில செய்தி தொடர்பாளர் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கடைகள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய நிலை வந்துவிட்டதால் மீதமானவற்றை பதப்படுத்துதல் என்ற பெயரில் சேமித்து வைக்கின்றனர்.

அதுமட்டுமின்றி ஒரு சில கடைகளில் எந்த ஒரு சுத்தமும் இல்லாமல் சமைக்கின்றனர். மேற்கொண்டு சமைத்து வைக்கும் உணவுகளை குளிர்சாதன பெட்டிகளில் பதப்படுத்தப்பட்டு மக்களுக்கு கொடுப்பதால் பல உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு மாறாக உணவு சமைக்கும் இடமானது அசுத்தமாகவே இருக்கிறது. இதையெல்லாம் வெளிப்புற மக்களுக்கு தெரிவதில்லை. இதனை தெரிவிக்கும் வகையில் சிறு மற்றும் பெரு கடைகள் முதல் அனைத்திலும் கேமராக்கள் அமைக்க வேண்டும்.

இந்த கேமராக்களின் லைவை மக்கள் காணும் படி சாப்பிடும் அறையில் பொருத்துவது நல்லது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் மீதமுள்ள இறைச்சி மற்றும் உணவுகள் எதுவும் பதப்படுத்தப்படாமல் தடுக்கலாம். மேற்கொண்டு உணவகங்கள் கையாளும் சுகாதாரத்தையும் அறிந்து கொள்ளலாம். இதனால் மக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் போன்றவற்றை முற்றிலும் தடுக்க முடியும். அத்தோடு ஹோட்டல்களுக்கு அனுப்பப்படும் இறைச்சிகள் ஒரு நாளில் எவ்வளவு வாங்கப்படுகிறது, விற்பனை ஆகிறது, வீணாகிறது என்பது குறித்து அனைத்து தரவுகளையும் சமர்ப்பிக்கும் வகையில் ஓர் தினசரி செயல்முறையை கொண்டு வர வேண்டும்.

இதன் ஒட்டுமொத்த பொறுப்பும் மாநகராட்சி மற்றும் வணிகத்துறை அதிகாரிகளையே சாரும். அத்தோடு கேட்டரிங் உள்ளிட்ட துறைகளில் படித்து வேலையில்லாத மாணவர்களுக்கு தக்க பயிற்சி கொடுக்க வேண்டும். எப்படி உணவுகளை சுகாதாரத்துடன் வழங்க வேண்டும், எப்படி சோதனை செய்ய வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கி மாதந்தோறும் ஒவ்வொரு கடைகளிலும் சோதனை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து கடைகளும் உரிமம் பெற்று இயங்குகிறதா என்பதை அவ்வபோது கண்காணிக்க வேண்டும். இவ்வாறான பல கோரிக்கைகளை தமிழக அரசின் முன்னிலையில் வைத்துள்ளார். தமிழக அரசு இவர் வைத்த கோரிக்கைக்கு செவிசாய்க்குமா? என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.