அப்படிப் போடு NTK வுடன் TVK கூட்டணி!! அண்ணன் தம்பி நாங்கள் சேர்ந்தால்.. விஜய் ஸ்டைலில் சீமான் பதில்!! 

0
182
Put it like that TVK alliance with NTK!! Annan Thambi if we join.. Seeman's answer in Vijay style!!
Put it like that TVK alliance with NTK!! Annan Thambi if we join.. Seeman's answer in Vijay style!!

அப்படிப் போடு NTK வுடன் TVK கூட்டணி!! அண்ணன் தம்பி நாங்கள் சேர்ந்தால்.. விஜய் ஸ்டைலில் சீமான் பதில்!!

நாடாளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பாக நடிகர் விஜய் அவர்கள் தனது கட்சி மற்றும் அது குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் களம் காண இருப்பதாக கூறினார். பலரும் இதனை எதிர்பார்த்த நிலையில் இவர் அடுத்து யாருடன் கூட்டணி வைப்பார் என்பது குறித்து தான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் அரசியலில் நுழைந்த உடன் பாஜக நாம் தமிழர் என பல கட்சிகள் இவருடன் கூட்டணி வைப்பது குறித்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிலும் நாம் தமிழர் கட்சி சீமானுடன் விஜய் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றது. இது குறித்து சீமானிடம் பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை எழுப்பியதில் அவர் கூறியதாவது, அரசியலில் இருக்கும் பிரச்சனையே அண்ணன் மற்றும் தம்பி நாங்கள் சேரக்கூடாது என்று எண்ணுவது தான். ஆனால் மக்கள் அதனை சேர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எனக்கூறி விஜய் ஸ்டைலில் வெயிட்டிங் என்று பதிலளித்தார். மேலும் நீங்கள் ரகசிய சந்திப்பு செய்து கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, நாங்கள் ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும்? அண்ணன் தம்பிக்குள் என்ன ரகசியம், சந்திக்க வேண்டுமென்றால் அதனை கூறுவோம் என தெரிவித்தார்.

மேற்கொண்டு விஜய் தற்பொழுது ஷூட்டிங்கில் மிகவும் பிசியாக உள்ளதாகவும் கூறினார். அதுமட்டுமின்றி விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்தது பற்றி உங்கள் கருத்து என கேள்வி எழுப்பினர். விஜயகாந்த் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே இந்த விருதை கொடுத்திருக்க வேண்டும். இந்த பெருமை இப்பொழுது எப்படி அவரை போய் சேரும் இன்று கேள்வி எழுப்பினார். மேற்கொண்டு அந்த விருதுக்கு மிகவும் தகுதியானவர் விஜயகாந்த் தான் என்று புகழாரம் சூட்டினார்.