திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்! 

0
243
#image_title

திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்!  நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்! 

சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த வக்கீல் மாரியம்மாள் என்பவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் 2007 ல் காதல் திருமணம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் இவர், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என போலீஸில் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார்.

ஆனால் ரமேஷ் ஒரு பிரமுகர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை எனவும் கூறுகிறார் மாரியம்மாள்.

மேலும் எதாவது கேட்டால் ரமேஷ், மாரியம்மாளை கொடுமைகள் செய்வதாகவும், விஷம் ஊற்றி கொள்ள முயற்சி செய்வதாகவும் குற்றம் வைக்கிறார்.

2012 வேறொரு பெண்ணை திருமணம் செய்து, அவளின் சொத்துக்களை விற்று, அந்த பெண் கர்ப்பமாக இருந்த பொழுது சென்னை அழைத்துவந்தார்.

இது குறித்து ரமேஷிடம் சென்று நான் கேட்டதற்கு, என்னை அடித்து சித்திரவதை செய்து விஷம் கொடுத்து என்னை கொல்லவும் முயற்சி செய்தார்.

இந்த குழந்தை எனக்கு பிறக்கவே இல்லை, என்று சொல்லி தெருவில் வீசினார், அக்கம் பக்கத்தினர் தான் வந்து என் குழந்தை உயிரை காப்பாற்றினார்கள்.

இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.

ரமேஷ் விடுதலை சிறுத்தை கட்சியின் மேற்கு மாவட்ட பொறுப்பாளர், என்பதால் அவர் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது நான் வெளியில் இருந்தால். அது என் உயிருக்கே ஆபத்தாகி விடும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கண்ணீர் மல்க பேசினார்.

Previous articleமணல் கடத்தல் கும்பலால்  அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்! 
Next articleஇனிமேல் இந்த தேர்வை தமிழிலும் எழுதலாம்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!