தினம் ஒரு சீதாப்பழம்! பிரச்சனைகளில் இருந்து உடனே தீர்வு!
சீதாப்பழம் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்றாக உள்ளது தற்பொழுது அனைத்து இடங்களிலும் சீதாப்பழம் என்பது கிடைக்கின்றது. தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிடுவதன் மூலம் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சீதாப்பழம் நீரழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர மிக நன்மை அளிக்கும். சீதா பழத்தில் குறைந்த அளவு கிலசமிக் இன்டெக்ஸ் பாலிபினோலிக் ஆன்ட்டி ஆக்சடென்ட் உள்ளது. இவை அனைத்தும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அதனால் ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.
சீதா பழத்தில் விட்டமின் ஏ விட்டமின் பி இருப்பதால் சரும பொலிவை அதிகரிக்கும். மேலும் முகத்தில் ஏற்படும் சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளிகள், இறந்த செல்கள் அனைத்து விதமான பிரச்சனைகளையும் நீக்கி முகத்தை மினுமினுப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் இவை கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. இந்த பழத்தில் கரோட்டின் ஆயட் ஸ்ட்ராங்கா ஆன்ட்டி ஆக்சிடென்ட் லிட்டின் போன்ற சத்துக்கள் இருப்பதால் தினமும் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டு வர கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.