தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியா… வேற மாதிரியான ஐடியாவா இருக்கே…
ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகரித்து வரும் மாணவர்களின் தற்கொலையை தடுக்க வித்தியாசமான ஐடியாவை அரசு கையாண்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. கோட்டா மாவட்டம் நுழைவுத் தேர்வு பயிற்சி மையமாக திகழ்ந்து வருகின்றது. கோட்டாவில் இந்த ஆண்டு இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க் கிழமை அதாவது ஆகஸ்ட் 15ம் தேதி 18 வயது நிரம்பிய மாணவர் ஒருவர் கோட்டாவில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார். கோட்டாவில் இந்த மாதத்தில் பதிவான நான்காவது மாணவர் தற்கொலை இதுவாகும்.
அதாவது ஐஐடி மாணவர் ஒருவரும், ஜேஇஇ மாணவர் ஒருவரும், நீட் யூஜி ஆர்வலர் ஒருவர் உள்பட மூன்று பேர் இந்த மாதத்தின் தொடக்கத்தில் தற்கொலை செய்து கொண்டனர். ஆகவே கடந்த செவ்வாய் கிழமை(ஆகஸ்ட் 15) மாணவர் செய்து கொண்ட தற்கொலை நான்காவது தற்கொலை ஆகும்.
கடந்த 2022ம் ஆண்டு பயிற்சி மையத்தில் 15 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் கோட்டாவில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றது. இதையடுத்து மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க விடுதிகளிலும், பேயிங் கெஸ்ட் விடுதிகளிலும் ஸ்பிரிங்-லோடட் மின்விசிறிகளை பொருத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பயனர்கள் தேர்வு மைய நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர். தற்கொலை செய்வதை தடுக்க பேன்களை மாற்றக் கூடாது. மாணவர்களின் மனக் குழப்பத்தை தான் மாற்ற வேண்டும் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்க உயர்நீதி மன்றம் வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோட்டாவில் உள்ள மாணவர்களின் உளவியல் மதிப்பீடு மற்றும் அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.