இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு!!

0
30

 

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்… கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திறப்பு…

 

இந்தியாவின் அதிநவீன வசதிகளுடன் கூடிய முதல் 3டி தொழில் நுட்பத்துடன் கூடிய தபால் நிலையம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவின் முதல் 3டி தபால் நிலைய கட்டிடத்தை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் அவர்கள் இன்று(ஆகஸ்ட்18) பெங்களூரில் திறந்து வைத்தார்.

 

இந்த முதல் 3டி தொழில்நுட்ப தபால் நிலையம் குறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் “கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் 1021 சதுர அடி பரப்பளவில் 3டி பிரின்டட் தபால் அலுவலக கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. இதை தொடர்ந்து இந்த 3டி தபால் நிலையம் செயல்படவுள்ளது.

 

இந்த 3டி தபால் நிலைய கட்டிடம் பிரபல கட்டுமான நிறுவனமான லார்சன் அன்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி மெட்ராஸ் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது” என்று கூறினார்.

 

மேலும் 3டி தபால் நிலையத்தை திறந்து வைத்த மத்திய ரயில்வே, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் “3டி தொழில்நுட்பத்தில் இந்தியா தற்பொழுது சாதனை படைத்துள்ளது. இந்த 3டி தொழில்நுட்பத்தின் மூலமாக இந்தியாவின் புதிய பரமாணத்தை நாம் பார்க்கிறோம்.

 

வழக்கமாக ஒரு கட்டிடத்தை கட்டுவதற்கு ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை ஆகும். இந்த தொழில்நுட்பத்தில் வெறும் 45 நாட்களுக்குள் வேலைகளை முடிப்பது ஒரு சாத்தியமான மாற்றாக பார்க்கப்படுகின்றது.

 

3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரிண்டட் கான்கிரீட் கட்டடம் கட்டுவது ஒரு புதிய சிறந்த முயற்சியாகும். இதற்கான பணிகளை சென்னை ஐ.ஐ.டி சிறப்பாக வழங்கியுள்ளது. இந்த 3டி தொழில்நுட்பம் மேலும் பிரபலமாகும் பொழுது இந்த தொழில்நுட்பத்தை முன்னெடுத்து செல்வதில் புதிய புதிய விதவிதமான வடிவங்களில் கட்டுமானங்களை உருவாக்க முடியும்” என்று கூறினார்.