வீட்டில் பதுக்கி வைப்பட்ட 650 கிலோ ரேஷன் அரிசி… அதிரடியாக பறிமுதல் செய்த காவல் துறையினர்!!

0
38

 

வீட்டில் பதுக்கி வைப்பட்ட 650 கிலோ ரேஷன் அரிசி… அதிரடியாக பறிமுதல் செய்த காவல் துறையினர்…

 

விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்து விற்பனை செய்து வந்தவரையும் கைது செய்துள்ளனர்.

 

திண்டுக்கல் மாவட்டம் முத்தழகுப்பட்டியை சேர்ந்த அமல்ராஜ் என்பவர் சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வந்த மக்களிடம் இருந்து குறைந்த விலை கொடுத்து ரேஷன் அரிசிகளை வாங்கி ஓட்டல்களுக்கும் மற்றும் கோழிப்பண்ணைகளுக்கு மாவு அரைத்தும் விற்பனை செய்து வந்துள்ளார்.

 

இந்த தகவலை அறிந்த குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா, சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோரது தலைமையிலான காவல் துறையினர் அமல் ராஜ் அவர்களின் வீட்டுக்கு இரகசியமாக சென்று ஆய்வு செய்தனர்.

 

ஆய்வு செய்த பொழுது அமல்ராஜ் விற்பனை செய்வதற்காக மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ ரேஷன் அரிசி காவல்துறையினரிடம் சிக்கியது. இதையடுத்து ரேஷன் அரிசியை பதுக்கிய அமல்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசியை பொதுமக்கள் யாரும் விற்பனை செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.