ஒரே கிளிக் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிய அரசு மருத்துவர்!!

Photo of author

By Sakthi

ONLINE SCAM:யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் ரூ.76.5 லட்சம் பறிகொடுத்துள்ளார்  தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்.

தமிழகத்தில் ஆன்லைன் வழியாக பண மோடி அதிக அளவில் நடந்து வருகிறது. ஆன்லைன் கேம்கள் மற்றும் டிரேடிங் மூலம் பணத்தை இழந்தவர்கள் ஏராளம். படித்தவர் முதல் படிக்காதவர் வரை ஆன்லைனில் பணம்  இழந்தவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு  டாக்டர் ஒருவர்   யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்து மோசடி கும்பலிடம் ரூ.76.5 லட்சம் பறிகொடுத்துள்ளார்   என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவர் அரசு மருத்துவக் கல்லூரியில் இணை பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்   பங்கு சந்தையில் பணம் முதலீடு  செய்வதில் ஆர்வமாக  இருந்து இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில்  பங்கு சந்தை தொடர்பான வாட்சப் குழுவில்  இணைந்து இருக்கிறார். இக் குழுவில் குறைந்த நாட்களில் அதிக அளவில் பணம் சம்பாதிப்பது எப்படி மற்றும் பங்கு சந்தையில் எவ்வாறு முதலீடு செய்வது தொடர்பான தகவல்கள் சொல்லப்பட்டு வருகிறது.

இக்குழுவிற்கு “திவாகர் சிங்” என்பவர் குழுவின் அட்மினாக இருக்கிறார். மேலும் இக் குழுவில் வரும் ஆன்லைனில் முதலீடு செய்தால் முப்பது சதவீத லாபத்தை பெறலாம் என்று கூறப்பட்டது. இதனை நம்பி பணத்தை முதலீடு செய்து இருக்கிறார். முதலில் குறைந்த அளவில் மட்டுமே  பணத்தை முதலீடு செய்து இருக்கிறார். லாபம் கிடைத்து இருக்கிறது. இதனால்  ரூ.76.5 லட்சம்  வரை பணம் மூன்று வாரங்களில்  மோடி கும்பல் அவருக்கு அனுப்பி இருக்கிறது.

கடந்த அக்டோபர் 27  ஆம் தேதி தனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முற்பட்டு  இருக்கிறார். ஆனால் அவருக்கு காத்து இருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி அவரது வங்கி கணக்கில் இருந்த முழு பணமும் கொள்ளை போவதை உணர்ந்தார். இதற்கு முன்னாள் யூடியூப் விளம்பரத்தை கிளிக் செய்து  பணத்தை இழந்து உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.