இப்படி விண்ணப்பித்தால் தமிழக அரசு தரும்.. ரூ.1 லட்சம் மானியம் கிடைக்கும்!!

0
112
If you apply like this, the Tamil Nadu government will give you a grant of Rs. 1 lakh!!
If you apply like this, the Tamil Nadu government will give you a grant of Rs. 1 lakh!!

தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் இலவச பேருந்து பயணம், மாதம் 1000 ரூபாய் என்ற மகளிர் உரிமை தொகை என பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து மேலும் பெண்களின் பாதுகாப்பை மனதில் வைத்து சென்னையில் 250 இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தின. இந்த திட்டத்திற்கான முக்கிய நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த பிங்க் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நவம்பர் 23,2024 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாவட்ட சமூக நல அலுவலர், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -600 001 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இது மட்டும் அல்லாமல் தகுதியான பெண் ஓட்டுனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு CNG அல்லது ஹைபிரிட் ஆட்டோ வாங்க தமிழக அரசு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும் ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதி பணம் வேண்டும் என்றால் வங்கிகளில் கடன் பெற அரசு உதவபடும். இதற்கான கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பு. வயது வரம்பு 25-45 வரை ஆகும். இந்த திட்டத்திற்கு மொத்தமாக 250 காலிப்பணியிடங்கள் உள்ளன. முக்கியமாக இந்த திட்டத்தில் பயன் பெற அவர் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

Previous articleகலைஞர் கனவு இல்லம்!! மார்ச் 31-குள் கட்டி முடிக்க உத்தரவு!!
Next articleஒரே கிளிக் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிய அரசு மருத்துவர்!!