சற்று முன் மறைந்த பிரபல நடிகர்!! திரையுலகினர் அதிர்ச்சி!!

0
226
a-famous-actor-who-passed-away-a-while-ago-the-film-industry-is-shocked
a-famous-actor-who-passed-away-a-while-ago-the-film-industry-is-shocked

சற்று முன் மறைந்த பிரபல நடிகர்!! திரையுலகினர் அதிர்ச்சி!!

பிரபல இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானவர் மாரிமுத்து வயது 57. அதன் பின்னர் இவர் வாலி, உதயா, பரியேறும் பெருமாள், உள்பட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பாராட்டினை பெற்றார்.

ஆரம்பத்தில் நடிகர் மாரிமுத்து சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து வந்தார். இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அப்படி பணிபுரிந்த போது அவர் 2008-ஆம்  ஆண்டு கண்ணும் கண்ணும், மற்றும் 2014ஆம் ஆண்டு புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ளார். அந்த படங்கள் அவருக்கு சரியானதொரு வாய்ப்பை வழங்காததால் நடிகராக முடிவு செய்து களமிறங்கினார்.

அது மட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் கலக்கி வருகிறார். சன் டிவியில் டிஆர்பியில் முன்னணி வகிக்கும் சீரியலான எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் இவர் கலக்கி இருப்பார். அந்தத் தொடரில் இவரின் கதாபாத்திரம் மற்றும் இவரது பேச்சு வழக்குக்கு என்றே ஏராளமான மனிதர்கள் உள்ளனர். அந்த அளவிற்கு அந்த சீரியலில் நடிப்பில் பின்னி பெடல் எடுத்திருப்பார்.

இந்த சூழ்நிலையில் இன்று காலை வழக்கம் போல் டப்பிங் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாக அவரின் உயிர் பிரிந்தது. அவரது இந்த திடீர் இழப்பு திரையுலகினரை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மாரிமுத்துவின் இந்த திடீர் மறைவிற்கு ஏராளமான திரை பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleபிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்!!! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!! இந்தாம்மா ஏய் என்னும் டயலாக்கை இனி எப்போ கேட்கப் போகிறோம்!!! 
Next articleகல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு.. நல்ல சம்பளத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை! செப்டம்பர் 18 இறுதி நாள்!