ஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து! மூன்று பேர் எரிந்து பலி!!

Photo of author

By Savitha

ஹைதராபாத் அருகே மர அறுப்பு ஆலையில் தீ விபத்து. அருகில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் எரிந்து பலி.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சமீபத்தில் உள்ள குஷாய்குடா சாய் நகர் காலனியில் மர அறுப்பு ஆலை ஒன்று உள்ளது. இன்று அதிகாலை அந்த மர அறுப்பு ஆலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரம் ஆகையால் தீ விபத்து ஏற்பட்டதை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் வேகமாக பரவிய தீ அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்கும் பரவி அங்குள்ள வீடுகள் தீப்பற்றி எரிந்தன.

இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் அலறியடித்து வீடுகளில் இருந்து வெளியில் வந்து ஓட்டம் பிடித்தனர். இந்த தீ விபத்தில் ஒரு வீட்டில் தூங்கி கொண்டிருந்த நலகொண்டா மாவட்டம் தங்குர்த்தியை சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்களான சுமா (28), நரேஷ் (35),ஜோசப் (5) ஆகிய மூன்று பேர் உயிருடன் எரிந்து மரணமடைந்தனர்.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
தீ விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.