மக்களவையில் பறக்கும் முத்தம்! புதிய சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்தி
மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உரையாற்றி கொண்டிருந்த பொழுது காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி அவையில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
மக்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.இதனை தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்றது.மேலும் இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்ற தொடங்கினார்.மேலும் தனது உரையில் மணிப்பூர் விவகாரம் குறித்தும்,மத்திய அரசின் நடவடிக்கை குறித்தும் காரசாரமாக பேசினார்.மேலும் பாஜகவிற்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.இதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் உரைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்து கொண்டிருந்தார்.இந்நிலையில் பதில் உரை நிகழ்த்தி கொண்டிருந்த பொழுது எதிர்வரிசையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி அவையை விட்டு வெளியேற முற்பட்டார்.அப்பொழுது அவர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு ‘பறக்கும் முத்தம்’ கொடுத்தபடி வெளியேறினார்.
இந்நிலையில் இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி எனது உரைக்கு முன் பேசிய நபர் அவையில் இருந்து புறப்படும் முன் அநாகரிகமாக நடந்து கொண்டார்.மேலும் இதற்கு முன் நாடாளுமன்றத்தில் இது போன்ற கண்ணியமற்ற நடத்தை ஒரு போதும் நடந்ததில்லை என்று குற்றஞ்சாட்டி தனது கண்டனத்தை அவையிலேயே தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ராகுல் காந்தியின் அநாகரிக செயலுக்கு நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லஜே மற்றும் 21 பெண் எம்.பி.க்கள் கையெழுத்திட்ட புகார் கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கினர்.மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.