பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவாகிய நண்பர்!! தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார்!!
இன்றைய காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் உழல் திருட்டு போன்றவை நடந்து கொண்டே வருகின்றது.அதனால் தனிப்பட்ட ஒவ்வொருவரும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
ஏனென்றால் நமக்கு தெரிந்தவர்கள் கூட சில சமயம் நம்மை ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.அதனை உறுதி செய்யும் விதமாக கோயம்பத்தூர் பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் ஜெயின் என்பவர் வேலைக்காக சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்திற்கு வந்தார்.
அதன்பின்பு தன்னிடமிருந்த தங்க கட்டிகளை நகைப்பட்டரையில் கொடுத்து அதனை ஆபரணமாக மாற்றி அதனை வெளிநாடுகளுக்கு வியாபாரம் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நபர் ஒருவர் இவரிடம் சுமார் 3 வருடங்களாக தொடர்ந்து ஆபரணங்களை ஆர்டர் செய்து கொண்டார். இதன் மூலம் அவரிடம் முழு நம்பிக்கையை பெற்றார்.
இந்த வகையில் அவர் அதிக ஆபரணம் வேண்டும் என்று முகேஷிடம் கூறியதை நம்பி தனது லாபத்துக்கு மீறி அதிக தங்க கட்டிகளை கொடுத்து ஆபரணமாக மாற்ற சொல்லி உள்ளார்.
ஆபரணம் கொடுத்த இடத்தில் வெறும் 560 கிராம் மட்டுமே செய்து கொடுத்த நிலையில் மீதம் உள்ள ரூ.5 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் அனைத்தும் எடுத்துகொண்டு அந்த நகைபட்டரை நபர் மற்றும் ஆர்டர் கொடுத்த இருவரும் தலைமறைவாகி விட்டனர்.
இதனை அறிந்த முகேஷ் உடனடியாக அருகில் இருத்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் அந்த இருவரும் மேற்கு வங்காளத்தில் தலைமறைவாக இருக்கலாம் என்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.