வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

0
185

வலிக்குது:! ப்ளீஸ் என்னை விட்டுடுங்க கதறிய பெண்!! 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் செய்த காரியம்!!

40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளை அடித்த இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

விருதுநகர் மாவட்டம் நாரத்தான் பட்டியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்
அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள பாலாவந்தம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்பொழுது அப்பெண்ணிற்கு ஏற்கனவே தெரிந்த முத்துச்செல்வம் என்பவர் காரில் வந்தார்.பிறகு அப்பெண் முத்து செல்வம் காரில் ஏறி வீட்டிற்கு சென்றுள்ளார்.இதன்பிறகு கோபாலபுரம் சாலையில் அந்த பெண் சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்து இறங்கியதாக கூறப்படுகிறது.

அப்பொழுது முத்துச்செல்வம் காரை பின் தொடர்ந்து வந்த இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த 5 நபர்கள் அந்தப் பெண்ணை தாக்கி வலுக்கட்டாயமாக காரில் தூக்கி கொண்டு சென்றுள்ளனர்.
இதனை தடுத்த நபர் முத்து செல்வத்தையும் பலமாக தாக்கியுள்ளனர் அந்த கும்பல்.

பின்னர் அந்த பெண்ணை காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து அந்தப் பெண் அணிந்திருந்த 5 பவுன் நகை மற்றும் பணம்,செல் போன் என அனைத்தையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் பெயரில்,சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர்.பின்பு அந்தப் பெண்ணிடம் பறிக்கப்பட்ட 5 பவுன் நகை மற்றும் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Previous articleஎட்டுமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி கொலை செய்த காவல் அதிகாரி!..தீ வைத்த ஊர் மக்கள்?
Next articleகேப்டனை பற்றி வதந்தியை பரப்பாதீர்கள்:!! மனைவி பிரேமலதா வேண்டுகோள்!!