பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

0
211
A girl born to a tenth grade girl! Shocking information revealed in the police investigation!
A girl born to a tenth grade girl! Shocking information revealed in the police investigation!

பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பிறந்த பெண்குழந்தை! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. அவர் அதே  பகுதியில் ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த சிறுமியின் தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் தினம்தோறும் குடித்து விட்டு சிறுமி மற்றும் அவருடைய தாயிடம்  தாராறு செய்வது வழக்கம். இந்நிலையில்  அந்த சிறுமியின் அக்காவின் கணவர் அழகேசன் (26) அவர் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துகொள்வதாக கூறி அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்துள்ளார். மேலும் அந்த சிறுமி கர்ப்பமாக இருபதாக அழகேசனிடம் கூறியுள்ளார்.

அதற்கு   அழகேசன் இதனை யாரிடமும் கூற வேண்டாம் குழந்தை பிறந்தவுடன் கூறாலாம் என சிறுமியிடம் சொன்னதால் அந்த சிறுமி அதை பற்றி யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி அந்த சிறுமி பள்ளியில் சோர்வாக இருந்ததை கண்ட ஆசிரியார் அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்தார்.
இதனைத்தொடர்ந்து பெற்றோர் அந்த சிறுமியை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஒன்பது மாதம் கர்ப்பமாக உள்ளார் என கூறினார்கள் அதனை கேட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு மருத்துவர்கள்  அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மேலும் சேலம் அரசு  மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் அக்காவின் கணவர் தான் இதற்கு காரணம் என அந்த சிறுமி வாக்குமூலம் அளித்தார். அதனையடுத்து அழகேசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Previous articleசென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்! சவரனுக்கு ரூ.40 உயர்வு 
Next articleஆண் குழந்தை பிறக்கனுமா? அப்போ கர்ப்பிணிகள் இந்த உணவை சாப்பிடுங்க