தினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்தய தண்ணீர்! இந்த பிரச்சனைகளில் இருந்து உடனே விடுதலை!

0
239

தினமும் காலையில் ஒரு டம்ளர் வெந்தய தண்ணீர்! இந்த பிரச்சனைகளில் இருந்து உடனே விடுதலை!

வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.நாம் உண்ணும் உணவுகள் அனைத்துமே பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உணவுப் பொருளில் வெந்தயம் ஒன்று.

வெந்தயம் பல ஆரோக்கிய குணங்களை கொண்டுள்ளது. இது பல நோய்களுக்கு மருந்தாகும் பயன்படுகிறது. அந்த வகையில் வெந்தயம் ஊற வைத்து தண்ணீரை குடித்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதனை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலமாக காணலாம்.

வெந்தயத்தின் அதிகப்படியான நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. மேலும் இதில் தாமிரம், நிகோடியன், அமிலம், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் இருக்கின்றன .

சிறிதளவு வெந்தயம் சிறிதளவு தண்ணீர் ஆகிய இரண்டையும் இரவு உறங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில் அதனை வடிகட்டி வெந்தய நீர் மட்டும் அருந்தி வருவதும் காரணமாக நம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படுகிறது.

வெந்தய நீர் குடிப்பதன் காரணமாக உடல் வெப்பத்தால் ஏற்படும் அதிகப்படியான வியர்வை நீரின் அளவு குறைதல், மஞ்சள் காமாலை, நீர் கடுப்பு போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க மிகவும் உதவுகிறது.

வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துகள் அதிகம் இருப்பதன் காரணமாக இதயத்தினை பலமாக வைக்க உதவும். மேலும் இதனை இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் தினசரி வெந்தய நீரை காலையில் குடித்து வர வேண்டும்.

வெந்தயத்தில் இருக்கும் கசப்பு தன்மை நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வெந்தயத்தின் அதிக அளவில் கரையும் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணத்தின் வேகத்தை குறைத்து கார்போஹைட்ரேட் உணவுகள் உண்ணும் அளவையும் குறைக்க உதவும். எனவே தினசரி காலையில் வெந்தயம் நீரை குடிப்பதன் காரணமாக இவ்வித பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

 

Previous articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகளை காணும் நாள்!!
Next articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!