வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!!

0
135

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை ஒரு கிளாஸ் கொடுத்தால் போதும்!! இடுப்பு வலி சரியாகிவிடும்!!

இப்போது இருக்கும் காலகட்டங்களில் சிறுவயதிலேயே பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு இடுப்பு வலி பிரச்சனைகள் போன்றவற்றால் மிகவும் அவதிப்படுவார்கள். இந்த பிரச்சனைகளால் அவர்களால் சரியாக படிக்கவும் முடியாமல் போய்விடுகிறது.

அடுத்ததாக பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு அந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக சரியாக வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது. இவர்கள் சிறிது நேரம் வேலை செய்தாலே முதுகுத்தண்டு பகுதியின் அடிப்பகுதியில் மிகவும் வலி இருக்கும். இது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் உடனடியாக சரி செய்யக்கூடிய அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு அருமையான மருத்துவ குறிப்பை இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்
சீரகப்பொடி
தேன் அல்லது கருப்பட்டி

செய்முறை:
ஒரு கிளாஸ் அளவு மிதமான சூட்டில் இருக்கக்கூடிய சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் அளவு சீரகப் பொடியை சேர்க்க வேண்டும். இதில் சுவைக்காக தேனை சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஆரோக்கியமான பொருளான கருப்பட்டியை சேர்த்துக் கொள்ளலாம். இதை அனைத்தையும் சேர்த்து கலந்து விட்டு அப்படியே குடிக்க வேண்டும்.

இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம் அல்லது எந்த நேரங்களில் சாதம் வடிக்கிறீர்களோ அந்த நேரங்களில் இதை தாராளமாக குடித்து வரலாம். இதை குடிப்பதால் இடுப்பு வலி மாதவிடாய் சமயங்களில் ஏற்படக்கூடிய அடி வயிற்று வலி இடுப்பு வலி முதுகு வலி கால் வலி என எந்த வலிகளும் வராது.

இதை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடித்தாலே நமக்கு வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும் ஆனால் அதோடு நிறுத்தி விடாமல் ஒரு மாதம் வரையிலுமே இதை குடித்து வர வேண்டும். அப்போதுதான் இதன் நிரந்தரமான பலன் நமக்கு தெரிய ஆரம்பிக்கும்.

இதை குடிப்பதனால் நமக்கு எவ்வாறு சத்துக்கள் கிடைக்கும் என்றால், இந்த சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் நிறைய சத்துக்கள் மிகுந்துள்ளது. எனவே இதை நாம் குடிப்பதால் எலும்புகளுக்கு நல்ல ஒரு உறுதியை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு கர்ப்பப்பைக்கு நல்ல ஒரு வலு சேர்க்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் கர்ப்பப்பையில் உஷ்ணம் ஏற்படும். அதனால்யே அடி வயிற்று வலி இடுப்பு வலி என அனைத்து வழிகளும் ஏற்படும் எனவே இந்த தண்ணீரை குடித்து வருவதால் இவை அனைத்தும் உடனடியாக சரியாகும். மேலும் தாய்ப்பால் கொடுக்கக்கூடிய பெண்களும் இதை தாராளமாக குடித்து வரலாம்.

இவ்வாறு செய்யக்கூடிய இந்த தண்ணீரை தான் அந்த காலத்தில் முன்னோர்கள் தினம் தோறும் குடித்து வந்ததால் இடுப்பு வலி கை கால் வலி மாதவிடாய் காலங்களில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள் ஆனால் தற்போது நாம் அனைவரும் குக்கரில் சாதத்தை வைத்து சாப்பிடுவதால் முதலில் நமக்கு சர்க்கரை நோய் வருகிறது. எனவே இதை தாராளமாக அனைத்து பெண்களும் குடித்து வரலாம் முக்கியமாக வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுக்கு இதை கொடுத்தால் ஆரோக்கியமாக வளருவார்கள்.

Previous articleஆயுசுக்கும் கால்சியம் இரும்புச்சத்து ஹீமோகுளோபின் குறைபாடு வராமல் இருக்க இதை குடியுங்கள்!!
Next articleஒரு கிளாஸ் போதும்!!ஒரே இரவில் எப்பேர்பட்ட மாதவிடாயும் வந்துவிடும்!!