லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!  

Photo of author

By Parthipan K

லாரியின் மீது அரசு  பேருந்து மோதி கோர விபத்து! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி  அரசு பேருந்து ஓன்று சென்று கொண்டிருந்த. அப்போது கனரக லாரி ஒன்றும் அதே பகுதியில் வந்து கொண்டிருந்தது . மேலும் அந்த அரசு பேருந்தானது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கனரக லாரியின்  பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது.

மேலும் இதில் அரசு பேருந்தின் முன்பக்க முகப்பு கண்ணாடி உடைந்து சாலையில் விழுந்தது. இந்நிலையில்  பேருந்தில் இருந்த  பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும்   இந்த விபத்தில் பேருந்தில் இருந்த  பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

இந்த  பேருந்து விபத்தின் காரணமாக சுமார் ஒரு மணிநேர அளவில்  வெள்ளகோவில், ஈரோடு சாலை போக்குவரத்து பெரிதும்  பாதிப்பு ஏற்பட்டடு பள்ளி குழந்தைகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

மேலும் விபத்து குறித்து மொடக்குறிச்சி போலீசார்ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் இந்த விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி காணப்பட்டது.