Breaking News

இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!!

A happy news for housewives!..gas cylinder price is low!!

இல்லத்தரசிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!..கேஸ் சிலிண்டர் விலை குறைவு!!

சென்ற மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பல மாற்றங்கள் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ளன.இந்நிலையில் மாதந்தோறும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 1ஆம் தேதியிலும் மற்றும் 15ஆம்  தேதியிலும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையின் மாற்றம் அறிவிக்கப்படும்.

அதனால் இன்று சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வரலாம் என்று தெரிகிறது.கடந்த 15 நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது. ஆதலால் சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.சென்ற மாதம் சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைந்த நிலையில்  இந்த மாதமும்  குறையும் என வீட்டு இல்லத்தரசிகள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னை வர்த்தக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை இன்று எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன. அதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.96 குறைந்து ரூ.2,045க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை வீட்டு உபயோக சிலிண்டரின் விலை மாற்றம் இல்லாமல்  ரூ.1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment