பள்ளி குழந்தைகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் ! ஜூன் 20 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை !
இந்தியாவில் நிலவி வரும் கோடை வெப்பத்தை எண்ணி பள்ளி குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளித்துவருகின்றனர். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மேகலாயா மாநிலத்தில் கொட்டி வரும் கனமழையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். பணிக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள் என பல பேர் எங்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இடைவிடாது பெய்து வரும் மிக அதிக கனமழையால் சாலைகள்களில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிலச்சரிவில் பல பள்ளி குழந்தைகள் உயிரிழந்தது என தெரிய வந்துள்ளது.
இதனால் அங்குள்ள பாலங்கள் மற்றும் தடுப்பு சுவர்கள் அவ்வப்போது இடிந்து விழும் ஆபாயம் உள்ளது என மக்கள் அச்சப்படுகின்றனர்கள். மிக கனமழையால் மேகலாயா மாநிலமே மழை சூழ்ந்து காணப்படுகிறது.வீடுகளுக்கு மழை நீர் புகுந்ததால் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்து வருகின்றது . இவற்றில் அதிக விஷம் கொண்ட உயிரினமும் இருப்பபதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மேகலாயா மாநிலத்தில் ஷில்லாங் மாவட்டத்தில் உள்ள இந்திய வானில ஆய்வு மையம் தகவலின் படி அடுத்து ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய மிக கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என கணித்து கூறப்பட்டுள்ளது. பி.சி.ஆர் அவர்கள் கூறுகையில் பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 20 வரை பள்ளிகளுக்கு விடுமுறை என உத்தரவிடப்பட்டுள்ளது. மறு அறிக்கை வரும் வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என தெரிவித்தார் .