சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!!

Photo of author

By Parthipan K

சென்னை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் குடிநீர் கட்டண வரி குறைப்பு!!

சென்னையில் குடிநீர் வரிக்கான கட்டணத்தை தாமதமாக செல்லுத்துவோர்களுக்கு மாதத்திற்கு ஒரு சதவீதம் குறைக்க படுவதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகரில் வசிப்பவர்கள் குடிநீர் வரிக்கான கட்டணத்தை எப்பொழுது தாமதமாகவே செலுத்தி வருகின்றனர். இதனால் குடிநீர் வாரியம் தாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு அபராதம் விதித்திருந்தது.

இந்தநிலையில்  அதற்கான 1.25 என்ற விழுக்காடு வரி விதிக்கப்பட்டிருந்தது.மேலும் இதில் இருந்து ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று குடிநீர் வாரியம் அறிவித்திருந்தது.மேலும் இந்த அறிவிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறியிருந்த நிலையில் இன்று முதல் குடிநீர் வரி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் குடிநீர் கட்டணம் 1.25 என்ற விழுக்காடு மதிப்பில்  இருந்து ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.குடிநீர் வரிக்கான கட்டணத்தை பொதுமக்கள் ஆன்லைன் வழியாகவும் செலுத்தி கொள்ளலாம் என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இவற்றை குடிநீர் வாரியம் அங்கிகாரப்பூர்வமாக கொடுத்துள்ள     www.cmwssb.tn.gov.in இணையதள பக்கத்தில் கிரெடிட் கார்டு ,டெபிட் கார்டு ,நெட் பேங்கிங் , யு பி ஜ மற்றும் வங்கி பரிவர்தன அட்டைகள் இவற்றின் மூலமாகவும் செலுத்தி கொள்ளலாம்.

மேலும் பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலங்கள் இயங்கும் வசூல் மையங்களில் காசோலைகள் மூலமாகவும் நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து  உரிய நேரத்தில் குடிநீர் கட்டணத்தை செலுத்துமாறும் குடிநீர் வாரியம் கேட்டுக்கொள்கின்றது.