பாத்ரூமில் தலையே இல்லாத முண்டம்!! அதிர வைக்கும் சம்பவம்!!

Photo of author

By CineDesk

பாத்ரூமில் தலையே இல்லாத முண்டம்!! அதிர வைக்கும் சம்பவம்!!

CineDesk

A headless torso in the bathroom!! Shocking incident!!

பாத்ரூமில் தலையே இல்லாத முண்டம்!! அதிர வைக்கும் சம்பவம்!!

தினமும் ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஏராளமான செய்திகளை பார்த்தும், படித்தும் வருகிறோம். அந்த வகையில் தற்போது விசித்திர சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது.

அதாவது, ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் ஹோட்டல் ஒன்றில் குளிக்கின்ற பாத் டப்பில் இருந்து தலையே இல்லாமல் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சைக்கோ குடும்பத்தால் அந்த உடலின் நபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதாவது, 62  வயதுடைய நபர் ஒருவர் ஹோட்டலுக்கு ஒரு பெண்ணோடு வந்து உணவு அருந்திவிட்டு அவர்கள் அறைக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து இரவு எட்டு மணி அளவில் கருப்பு உடையோடு மூன்று பேர் அங்கிருந்து சென்றுள்ளனர். ஹிடோஷியை தவிர மற்ற அனைவரும் அந்த ஹோட்டலில் இருந்து வெளியே சென்றுவிட்டனர்.

இதைத் தொடர்ந்து அறை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால் ஹோட்டல் ஊழியர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே, ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்தனர்.

அப்போது பாத்ரூமில் இருக்கக்கூடிய பாத் டப்பில் தலையே இல்லாமல் உடல் ஒன்று அதில் இருந்துள்ளது. இந்த உடலின் தலை ஒரு மேஜையின் மீது இருந்துள்ளது.இதைப்பாத்த ஊழியர்கள் அனைவரும் பயந்து ஓடி வந்துவிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் ஹிடோஷியோடு வந்த ரூனா தாமுரா என்ற ஒரு பெண்ணையும் அவரது தந்தை மற்றும் தாயார் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.