மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும்!

Photo of author

By Savitha

மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வனத்துறையும் மின்சார துறையும் இணைந்து கூட்டு களத்தணிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர்‌ மதிவேந்தன் பேரவையில் தெரிவித்துள்ளார்.

வனத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், தமிழகத்தில் 2800 யானைகள் உள்ளதாகவும்.

யானைகள் காலங்காலமாக பயன்படுத்திய வலசைப் பாதைகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் மற்றும் தடைகளினாலே யானைகள் தடம்மாறி விவசாய நிலங்களுக்குள் வருகிறது.

யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தபோது மின்சாரம் தாக்கி சில யானைகள்
உயிரிழந்தன.

இந்த நிகழ்வுகள் பின்பு இனிவரும் காலங்களில் மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

வனத்துறையின் யானைகளின் நகர்வினை கண்காணிப்பதற்கான, புதிய முயற்சிகளான செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான யானை வருகையினை அறிவிக்கும் முன் எச்சரிக்கை அமைப்பு ரூ.7.10 கோடியிலும், ரேடியோ காலரிங் கருவிகள் பொருத்துதல் மின்னோட்டத்தினை தடுக்கும் அபாய ஒலி அமைப்பு மற்றும் புவி இடக் குறியீடு முறையிலான முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்துதல் போன்ற திட்டங்கள் யானை பாதுகாப்புக்காக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மதிவேந்தன் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு வனப்பகுதிகளில் யானைகளின் இறப்பு குறித்து விரிவான பகுப்பாய்வு செய்வதற்கும் இந்தியாவிலேயே முதன் முறையாக யானைகள் இறப்பு தணிக்கை கட்டமைப்பு அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.