சேலம் மாவட்டத்தில் டிராவல்ஸ் மீது லாரி மோதி கோர விபத்து! அந்த பகுதி முழுவதும் பரபரப்பு!
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து உறவினர்களின் திருமணத்திற்கு ஈரோட்டிற்கு சென்று விட்ட குடும்பத்துடன் தர்மபுரிக்கு திரும்பி ட்ராவல்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அம்மாபேட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது அதே வழியில் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
மேலும் லாரியானது தனது கட்டுபாட்டை இழந்து எதிரில் வந்த டிராவல்ஸ்யின் மீது மோதியது. அப்போது டிராவல்ஸ் ஓட்டுநர் உட்பட 25 பேர் உயிர் தப்பினர். லாரி ஒட்டுனர்க்கும் எந்த விதமான பாதிப்பும் இன்றி உயிர் தப்பினார். அந்த பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தினால் ஒருவருக்கும் பெரிய பாதிப்பு எதுவும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்கள்.
இந்த விபத்தினால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியானது பரபரப்பான நிலையில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து சங்ககிரி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.