மருத்துவமனையில் தாயுடன் உறங்கிய ஒரு மாத குழந்தை! நடு இரவில் குழந்தைக்கு நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்! 

0
155
#image_title

மருத்துவமனையில் தாயுடன் உறங்கிய ஒரு மாத குழந்தை! நடு இரவில் குழந்தைக்கு நேர்ந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்! 

தாயுடன் மருத்துவமனை வார்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு மாத ஆண் குழந்தையை தெரு நாய்கள் இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடுமையான இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி மாவட்டத்தில் ஜவாய்பந்த் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர குமார். இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் சிரோஹி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.  இதனால், அவருக்கு துணையாக அவரது மனைவி ரேகா மற்றும் அந்த தம்பதியினரின் ஒரு மாத ஆண் குழந்தை உள்ளிட்ட 3 குழந்தைகள் அந்த மருத்துவமனையின் வார்டிலேயே தங்கி உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு  அனைவரும் ஒன்றாக தூங்கி உள்ளனர். அவர்களின் ஒரு மாத ஆண் குழந்தை தாய் ரேகாவுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. 

இதையடுத்து நேற்று இரவு தாயுடன் வார்டில் படுத்து இருந்த ஒரு மாத குழந்தையை, திடீரென அவர்களின் வார்டுக்குள்  நுழைந்த 3 தெரு நாய்கள்  வாயில் கவ்வி இழுத்துச் சென்று உள்ளன. இதனால் குழந்தை வலி தாங்காமல் அழுதுள்ளது.

குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு மற்ற வார்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்து உள்ளனர். அங்கே குழந்தையை தெரு நாய்கள் இழுத்து செல்லும் காட்சியை கண்டு அதிர்ச்சியுற்றனர். தெரு நாய்களை அங்கிருந்தவர்கள் விரட்ட முயற்சித்து உள்ளனர். அவைகளை மிரட்டி அச்சுறுத்தியும் உள்ளனர்.

ஆனால், குழந்தையை நாய்கள் வெளியே இழுத்து சென்று விட்டன. இதையடுத்து நாய்கள் தாக்கியதில் குழந்தையின் கால், முகம் மற்றும் கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவமனை வளாகத்தில் இரவில் தெரு நாய்கள் சுற்றி திரிந்தது கண்டு நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் இடையே மனதளவில் பயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொத்வாலி காவல் நிலைய போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் ஒரு மாதக் குழந்தை கொடூரமாக இறந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது.