இந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்!
நம் வீட்டில் பல்லி என்ற உயிரினம் இயல்பாகவே அதிக அளவில் காணப்படும் ஒரு சிலர் அதனை அடித்து விரட்டுவதும் உண்டு ஆனால் பல்லியால் பல நன்மைகள் உள்ளது. காஞ்சிபுரத்தில் பல்லிக்கெனவே தனிக்கோவில் உள்ளது. முன்னோர்களும் பல்லியை பற்றி பல தகவல்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் அட்சய திருதி நாளன்று நம் கண்ணில் பல்லி தென்படாது அவ்வாறு நம் கண்ணில் பல்லி தென்பட்டால். வாஸ்து பகவானின் மந்திரத்தை கூற வேண்டும். அட்சய திருதி அன்று பல்லியை பார்த்தால் நாம் செய்துள்ள ஏழேழு ஜென்மங்களின் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்.
நாம் எப்பொழுதாவது முக்கியமான விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது பேசிக் கொண்டிருக்கும் பொழுதோ பல்லி சத்தமிட்டால் அது நல்ல சகுனம் என கூறப்படுகிறது. உங்கள் வீட்டில் அதிக அளவு பல்லிகள் இருந்தால் தானியங்கள் என்றும் குறைவில்லாமல் இருக்கும் என கூறப்படுகிறது.
தீபாவளியன்று பல்லியை கண்டால் விரைவில் சுப காரியம் நடக்கும் என்பது ஐதீகம். தீபாவளி அன்று இரவு நேரத்தில் பல்லியை கண்டால் மகாலட்சுமி காண்பது என அர்த்தம். தீபாவளியன்று பல்லியை பார்த்தவுடன் மகாலட்சுமியின் மந்திரமான ஓம் மகாலட்சுமி நம என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்த பிறகு வீட்டில் உள்ள அனைவரிடமும் பல்லியை காண்பிக்க வேண்டும். மற்றும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும். தீபாவளி அன்று ஒரு பல்லியை பார்த்தால் முன்னோர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக உள்ளது என அர்த்தம். பல்லி பூஜையறையில் பார்த்தால் செல்வ வளம் பல மடங்கு பரவும்.