வந்தாச்சு புதிய கட்டுப்பாடு.. 33 ஆயிரம் பால் அட்டைதாரர்களை நீக்கி அதிரடி காட்டிய ஆவின்!

0
99
#image_title

வந்தாச்சு புதிய கட்டுப்பாடு.. 33 ஆயிரம் பால் அட்டைதாரர்களை நீக்கி அதிரடி காட்டிய ஆவின்!

ஆவின் பால் நிறுவனம் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கி தற்பொழுது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் விவசாயிகள்,பால் பண்ணை வைத்திருப்பவர்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து அவற்றை தரத்திற்கேற்ப வெவ்வேறு நிறம் கொண்ட பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.மற்ற நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகளின் விலையை காட்டிலும் ஆவின் நிறுவனம் குறைந்த விலைக்கு பாலை விற்பனை செய்து வருகிறது.தமிழக்தில் விவசாயிகள் மற்றும் பால் பண்ணையாளர்களிடம் இருந்து தினமும் சுமார் 37 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் ஆவின் நிறுவனம் மாதாந்திர பால் அட்டை மூலம் 5 லட்சம் பேருக்கு பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆவின் பால் பாக்கெட்டுகள் நீலம்,பச்சை,ஆரஞ்சு,பிங்க் என்று 4 நிறங்களில் கிடைக்கிறது.
இதில் நீல நிற பால் பாக்கெட்டுகள் மக்கள் பயன்பாட்டில் அதிகம் காணப்படுகிறது.இதில் மீடியமான கொழுப்பு இருப்பதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்ளலாம்.பச்சை நிற பாக்கெட்டுகள் நீல நிற பாக்கெட்டுகளை ஒப்பிடும் போது சற்று கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படுவதால் அதனை வயதானவர்கள் தவிர்ப்பு நல்லது.அதேபோல் பிங்க் நிற பால் பாக்கெட்டுகளில் கொழுப்பு சத்து மிகவும் குறைந்து காணப்படுவதால் அவற்றை நோயாளிகள்,குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் எடுத்து கொள்ள உகந்தது.ஆனால் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளில் கொழுப்பு சத்து மிகுந்து பால் மிகவும் அடர்த்தி நிறைந்த காணப்படுகிறது.100 கிராம் பாலில் சுமார் 6 கிராம் கொழுப்பு மட்டுமே நிறைந்துள்ளது.இதனால் இவை புல் க்ரீம் பால் என்று சொல்லப்படுகிறது.இந்த பால் பெரும்பாலும் கடைகளில் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிக கொழுப்பு சத்து நிறைந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டு 1 லிட்டர் ரூ.60 விற்கப்படும் நிலையில் அட்டைதாரர்களுக்கு ரூ.46க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால் சிலர் தவறான முகவரி மற்றும் ஆவணங்களை கொடுத்து இந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை பால் அட்டை மூலம் பெற்று டீ கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்ததால் ஆவின் நிர்வாகத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.இந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியதால் எதனால் இவ்வாறு நடக்கிறது என்று ஆவின் நிர்வாக அதிகாரிகள் விசாரிக்க தொடங்கினர்.அப்பொழுது தான் போலி ஆவின் அட்டைதாரகளின் தவறான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில் இந்த முறைகேட்டை தடுக்க மாதாந்திர பால் அட்ட்டைதாரர்களின் ரேஷன் கார்டு,வீட்டு ரசீது மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.காரணம் 1 லட்சத்து 5 ஆயிரம் ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்கும் நபர்களில் சுமார் 33 ஆயிரம் பேர் போலி ஆவணங்களை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இந்நிலையில் ஆவின் நிர்வாகத்தின் இந்த அதிரடியால் 1,05,000 பால் அட்டைதாரர்களில் இருந்து 72000 என்று குறைக்கப்பட்டு இருக்கிறது.தினமும் 11 ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அட்டைதாரர் குறைப்பால் ஆவின் நிர்வாகத்திற்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படாது என்றும் இனிமேல் தான் வருவாய் அதிகம் கிடைக்கும் என்றும் ஆவின் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

Previous articleஇந்திய மத்திய வங்கியில் சூப்பர் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
Next article19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர்!!! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!!!