வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்!! அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தை புரட்டி போட காத்திருக்கும் பேய் மழை!!
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்று புதிதாக தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்பொழுது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இருக்கிறது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு இருப்பதால் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தை கனமழை புரட்டி போட காத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் தற்பொழுது தற்பொழுது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பருவமழை வீரியம் அடைந்து இருக்கிறது.
தமிழகத்தில் நேற்று 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகின்ற 17 ஆம் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.