மாநிலம் முழுவதும் விரைவில் அமலாகும் புதிய திட்டம்! ஆசிரியர்கள் பள்ளியில் இந்த வார்த்தையை பயன்படுத்தக் கூடாது!
தற்போதுள்ள சூலில் அனைவரும் நாகரிகமாக பேசுவதாக எண்ணி பள்ளிகளில் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைகின்றனர்.ஆனால் கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரளாவில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என அழைக்ககூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார்த்தைகள் ஆசிரியர்கள் மத்தியில் பாலின பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என புகார் எழுந்து வருகின்றது. அதனால் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் ஆசிரியர்களை எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் டீச்சர் என்று அழைக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசும் பொழுது தவறான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.
தற்போது பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசும் பொழுது போடா மற்றும் போடி என்ற வார்த்தைகள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்து வருகின்றது. அவ்வாறு ஆசிரியர்கள் பேசினால் மாணவர்களின் மனநிலை பாதிக்கபடுகின்றது. அதனால் இனி அதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது திருவனந்தபுரத்தில் இந்த தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் விரைவில் அமல் படுத்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.