ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

0
185
Ayyappan temple is open for five days only! Online Booking Begins!
Ayyappan temple is open for five days only! Online Booking Begins!

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எந்த கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வில்லை.

கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து கோவில்களிலும் அனுமதி வழங்கப்பட்டனர். அதுபோலவே சபரிமலையிலும் பக்தர்கள் அனுமதிக்கபட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. மேலும் கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி தான் மண்டல மகரவிளக்கு பூஜை நிறைவடைந்தது.

மேலும் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாற்றாக அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இருப்பினும் சபரிமலையை பொறுத்தவரை ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அந்தவகையில் வரும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 12 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொள்ள ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகின்றது. ஐந்த நாட்களும் காலை 5 மணிக்கு முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடை திறக்கபட்டிருக்கும். அதனை தொடர்ந்து வரும் 17 ஆம் தேதி இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K