உருவாகிறது புதிய புயல்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
90
#image_title

உருவாகிறது புதிய புயல்..!! அடுத்த 3 மணி நேரத்தில் இத்தனை மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில வாரங்களாக பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் அந்தமான் அருகே உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியானது தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியின் வடமேற்காக நாளை(நவம்பர் 30) ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி அன்று புயலாக வலுக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாக இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சென்னை, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெறிவிக்கப்ட்டு இருக்கிறது.

இந்நிலையில் அந்தமான் அருகே உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருப்பதினால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஇந்தியா vs ஆஸ்திரேலியா T20 மேட்ச்: த்ரில்லர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி..!!
Next articleபுகை பிடித்தலுக்கான தடையை நீக்கிய பிரபல நாடு!! இது நாட்டிற்கே அவமானம் விவாதபொருளான விவகாரம்!!